தொடர்ந்து அதிகரித்த கொள்வனவு மேளாலர் குறியீடு
2023-08-31 14:56:50

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகமும் சீனச் சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்வனவு சம்மேளனம் ஆகஸ்ட் 31ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, ஆகஸ்ட் திங்களில் சீன உற்பத்தி தொழில் துறையின் கொள்வனவு மேலாளர் குறியீடு 49.7 விழுக்காட்டை எட்டியது. இவ்விகிதம், கடந்த மாதத்தை விட 0.4 விழுக்காடு அதிகம். கடந்த 3 மாதங்களில் இக்குறியீடு தொடர்ந்து அதிகரித்து வருவது சீனப் பொருளாதாரம் உறுதியான மீட்சியை அடைந்துள்ளது என்பதை வெளிக்காட்டியுள்ளது.