இரண்டாவது காலாண்டில் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தின் திருத்தம்
2023-08-31 10:41:25

அமெரிக்க வணிக அமைச்சகம் 30ஆம் நாள் வெளியிட்ட திருத்த புள்ளிவிவரங்களின் படி, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு 2.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது, முதற்கட்டத்தில் வெளியான புள்ளிவிவரத்தை விட, 0.3 புள்ளிகள் குறைக்கப்பட்டது.

இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சியின் கீழ்நோக்கிய திருத்தம் தனியார் முதலீடு இருப்பு மற்றும் குடியிருப்பு சாரா நிலையான சொத்து முதலீட்டின் சரிவைப் பிரதிபலிக்கிறது என்று அமெரிக்க வணிக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.