சர்வதேச ஒத்துழைப்புக்கான 3வது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக்கூட்டம் அக்டோபரில் துவக்கம்
2023-08-31 17:30:44

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஆகஸ்டு 31ஆம் நாள் கூறுகையில், சர்வதேச ஒத்துழைப்புக்கான 3வது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக்கூட்டம் அக்டோபர் திங்கள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முன்வைக்கப்பட்ட 10 ஆண்டு நிறைவுக்கான மிக முக்கிய நிகழ்ச்சியாகவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றிய பல்வேறு தரப்புகளின் ஒத்துழைப்புக்கான முக்கிய மேடையாகவும் இம்மன்றக்கூட்டம் திகழ்கிறது என்றார்.