பெய்ஜிங்கில் வாங் யீ-ஜேம்ஸ் கிளவர்லி சந்திப்பு
2023-08-31 16:03:38

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஆகஸ்ட் 30ஆம் நாள் பெய்ஜிங்கில், பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி விவகாரங்களுக்கான அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லியுடன் சந்திப்பு நடத்தினார்.

வாங் யீ கூறுகையில், பிரிட்டனின் வல்லரசு தகுநிலை மற்றும் சிறப்பான பங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் சீனா, பிரிட்டனுடன் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் நிலையான உறவை வளர்க்கப் பாடுபட்டு வருகிறது. மாறி வரும் சிக்கலான சர்வதேச நிலைமையில், சீனாவும் பிரிட்டனும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, இருநாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கிளவர்லி கூறுகையில், ஆக்கப்பூர்வமான பிரிட்டன்-சீன உறவு இருநாட்டு மக்கள் மற்றும் உலகிற்கு நன்மை புரியும். ஒரே சீனா கொள்கையைப் பிரிட்டன் அரசு கடைப்பிடிக்கிறது. சீனாவுடன் மேலதிக ஒத்துழைப்புகளை மேற்கொள்வதை பிரிட்டன் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்று தெரிவித்தார்.

உக்ரைன் நெருக்கடி, கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.