தைவானுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
2023-08-31 17:12:21

வெளிநாட்டு இராணுவ நிதி திரட்டல் திட்டத்தின் மூலம் சீனாவின் தைவானுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு அமெரிக்க அரசு அண்மையில் முதன்முறையாக ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஆகஸ்ட் 31ஆம் நாள் கூறுகையில், இந்நடவடிக்கைக்குக் கடும் மனநிறைவின்மையையும் உறுதியான எதிர்ப்பையும் சீனா தெரிவிப்பதாகவும், எந்த பெயரிலும் முறையிலும் அமெரிக்க-தைவான் இராணுவத் தொடர்பை வலுப்படுத்தி, தைவானுக்கு ஆயுதங்களை வழங்கும் செயலை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என சீனா வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.