சீன அதிகாரிகள் மீது தடை விதித்த அமெரிக்காவுக்கு சீனா பதிலடி
2023-08-31 17:32:14

திபெத் பிரச்சினையைப் பயன்படுத்தி சீன அதிகாரிகள் மீது விசா தடை நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஆகஸ்ட் 31ஆம் நாள் கூறுகையில், இச்சம்பவத்தில் அவதூறு பரப்பி சீனாவைக் களங்கப்படுத்திய செயலிலும், நீண்டகாலமாக திபெத் பிரச்சினையில் தலையீடு செய்வதிலும் ஈடுபட்டுள்ள அமெரிக்கத் தரப்பினர்கள் மீது சீனா ஒரேமாதிரியான விசா தடையை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

அமெரிக்க தரப்பு உண்மைகளைப் புறக்கணித்து, திபெத் பற்றிய பொய்களைப் புனைந்து, சீன அதிகாரிகள் மீது சட்ட விரோதமாக தடை விதித்த செயல், சீனாவின் உள்விவகாரத்தில் கடுமையாக தலையீடு செய்து, சீனாவின் நலன்களையும் சீர்குலைத்துள்ளது. இது, சர்வதேச உறவுகளுக்கான அடிப்படை விதிகளையும் மீறியுள்ளது. இத்தகைய செயலை சீனா உறுதியுடன் எதிர்ப்பதோடு எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார்.