சீனாவின் சேவை வர்த்தகம் சீரான வளர்ச்சி
2023-08-31 17:18:14

சீன வணிக அமைச்சகம் ஆகஸ்டு 31ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில், சீனாவின் சேவை வர்த்தகம் தொடர்ச்சியாக அதிகரித்து காணப்பட்டது. இக்காலத்தில், சேவை வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 3 லட்சத்து 66 ஆயிரத்து 691 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் அறிவாற்றல் செறிவான சேவையின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 1 லட்சத்து 58 ஆயிரத்து 387 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 11.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மேலும், சுற்றுலா சேவை தெளிவாக மீட்சியடைந்துள்ளது. முதல் 7 மாதங்களில், சுற்றுலா சேவையின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 76 ஆயிரத்து 813 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 66.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.