© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பார்க் ஜின்னுடன் ஆகஸ்ட் 31ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டார்.
வாங்யீ கூறுகையில், தென் கொரியாவுக்கான சீனாவின் கொள்கைகள் தொடர்ச்சியாகவும் நிலைப்புத் தன்மையுடனும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார். மேலும், இரு நாட்டு தூதரக உறவு நிறுவப்பட்டதன் ஆரம்ப கால குறிக்கோளைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், இரு தரப்பும் வெளிப்புறத்தின் தலையீட்டைத் தடுத்து இரு நாட்டுறவின் நிலையான சீரான வளர்ச்சியைக் கூட்டாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த பார்க் ஜின், தென் கொரியாவும் சீனாவும் அண்டை நாடுகள் மற்றும் முக்கிய கூட்டாளிகளாகும் என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், சீனாவுடனான உயர் நிலைத் தொடர்பையும் பேச்சுவார்த்தையையும் மேலும் நெருக்கமாக்குவதைத் தென் கொரியா எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், தொழில் விநியோகச் சங்கிலியிலிருந்து குறிப்பிட்ட நாடுடனான தொடர்பைத் துண்டிக்கச் செய்வதைத் தென் கொரியா விருப்பமில்லை என்றும் குறிப்பிட்டார். அதோடு, சீனாவுடன் கூட்டு வெற்றி தரும் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தி தொழில் விநியோகச் சங்கிலியின் நிலைப்புத் தன்மையை உறுதி செய்து, பிராந்திய பொருளாதார வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற விரும்புவதாகவும் பார்க் ஜின் கூறினார்.
ஜப்பான் கதிரியக்க நீரைக் கடலுக்குள் வெளியேற்றும் பிரச்சினை, கொரிய தீபகற்ப பிரச்சினை முதலியவற்றைக் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.