ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான முக்கிய ஊடக மையத்தின் திறப்பு நாள்
2023-09-01 16:59:33

ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு, இப்போட்டிக்கான முக்கிய ஊடக மையத்தின் திறப்பு நாள் நிகழ்ச்சி செப்டம்பர் முதல் நாள் நடைபெற்றது. 250க்கும் மேலான செய்தியாளர்கள் இம்மையத்திற்கு முன்கூட்டியே பயணம் மேற்கொண்டனர்.

இந்த முக்கிய ஊடக மையத்தின் நிலப்பரப்பு சுமார் 50 ஆயிரம் சதுர மீட்டராகும். நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது, இது நாளுக்கு 24 மணி நேரமும் இயங்கும்.

மேலும், இம்மையத்தின் பண்பாட்டு அரங்கில், ஹாங்சோ நகரிலுள்ள சொங் வம்சக் கால பண்பாட்டு அம்சங்கள் காட்சிக்கு வைக்கப்படும். அதோடு, தேநீர் வருந்து, விசிறி கலை, பூத்தையல் உள்ளிட்ட பாரம்பரிய பண்பாட்டு அனுபவ நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.