ஏப்ரல்-ஜூன் இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் 7.8
2023-09-01 14:47:39

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நாட்டின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆகஸ்ட் 31ஆம் நாள் வியாழன் அன்று வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

 இது, முதலாவது காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட 6.1 சதவீத ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தை விட அதிகம் என்றபோதிலும், முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இருந்த 13.1 சதவீத விகித வளர்ச்சியோடு ஒப்பபிடும் போது மிகவும் குறைவாகும்.

இதனிடையில், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்த நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்தை எதிரொலிக்கின்றன.