பிரிட்டனில் அமைச்சரவை மாற்றம்
2023-09-01 12:04:49

பிரிட்டனின் தேசியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த பென் வாலஸ் அப்பதவியில் இருந்து விலகியதை அடுத்து பிரிட்டனின் எரியாற்றல் பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார் என்று பிரிட்டன் அரசு ஆகஸ்ட் 31ஆம் நாள் அறிவித்துள்ளது.

இதற்கு முன், பிரிட்டன் தலைமையமைச்சர்  ரிஷி சுனக்,  பென் வாலஸின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.  பல ஆண்டு காலம் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த பென் வாலஸின் பதவி விலகலைத் தாம் புரிந்து கொண்டுள்ளதாக ரிஷி சுனக் தெரிவித்தார். இதனிடையே, தேசிய பாதுகாப்புக்கான செலவுகளைக் குறைக்க வேண்டாம் என்று தன் பதவி விலகல் கடிதத்தில் பென் வாலஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.