"ஒரே நாடு ஒரே தேர்தல்" முறையை ஆராய, இந்தியாவில் சிறப்பு குழு அமைப்பு!
2023-09-01 18:20:15

நாட்டில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறையின் சாத்தியக்கூறுகளை ஆராய இந்திய அரசு, குழு ஒன்றை அமைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் முன்னாள் அரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலானா இக்குழு, இவ்விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22ஆம் நாள் வரை நடைபெறும் என்று இந்திய அரசு அறிவித்து ஒரு நாளுக்கு பிறகு, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.