சலுகை விலையில் துருக்கிக்குத் தானியம் வழங்கும் ரஷ்யா
2023-09-01 12:03:53

உள்ளூர் நேரப்படி ஆகஸ்ட் 30ஆம் நாள், ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, ரஷ்ய அரசுத் தலைவர் புதின் வழங்கியுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த ரஷ்யாவும் துருக்கியும் முயன்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவுக்கு இணங்க, கத்தாரின் நாணய உதவியுடன், சலுகை விலையில் துருக்கிக்கு 10 இலட்சம் டன் வரையிலான தானியங்களை ரஷ்யா வினியோகிக்கும். இத்தானியங்கள் துருக்கி தொழில் நிறுவனங்களால் பதனீடு செய்யப்பட்ட பிறகு, தேவையுள்ள  நாடுகளுக்கு வழங்கப்படும்.

வேளாண் பொருட்களை ஏற்றியிறக்குவதற்குரிய கருங்கடல் உடன்படிக்கையின் செயல்பாடு நிறுத்தப்பட்ட பின், மிகச்சிறந்த  மாற்றுத்திட்டமாக ரஷ்யா இதனைக் கருதுகிறது.