சீன-நிகரகுவா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது
2023-09-01 14:39:49

சீன மக்கள் குடியரசு மற்றும் நிகரகுவா குடியரசு இடையேயான தாராள வர்த்தக ஒப்பந்தம் ஆகஸ்ட் 31ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. சீன வணிகத் துறை அமைச்சர் வாங் வென்டெள, நிகரகுவா அரசுத் தலைவர் பணியகத்தின் முதலீடு, வர்த்தகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் லாரேனோ ஆகியோர் காணொளி வழியாக இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தை கூடியவிரைவில் நடைமுறைக்கு வரச் செய்யும் விதம், இரு தரப்பும் தங்கள்து உள்நாட்டு நடைமுறைகளை இப்போது தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.