தேவையெனில் சீன-அமெரிக்க அமைச்சர்களின் நேரடியாக விவாதிப்பர்
2023-09-01 14:56:55

31ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சு யூடிங் அம்மையார் கலந்து கொண்டு அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அமைச்சரின் பயணம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதோடு, இரு நாடுகளுக்கிடையிலான புதிய தொடர்பு வழிமுறைகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார். தவிரவும், முக்கியப் பிரச்சினைகளை எதிர்கொண்டால், சீன மற்றும் அமெரிக்க அமைச்சர்கள் அவை பற்றி நேரடியாக விவாதிப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.

நிர்வாக அனுமதியை வலுப்படுத்துவதில் வணிக ரகசியம் மற்றும் ரகசியமான வணிகத் தகவலைப் பாதுகாப்பது குறித்து இரு நாடுகளின் நிபுணர்கள் தொழில் நுட்ப ரீதியில் கலந்தாய்வு நடத்தியதையும் அவர் குறிப்பிட்டார்.