ஃபுமியோ கிஷிடா மீதான புகார் கடிதம்
2023-09-02 16:03:59

அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரைக் கடலில் வெளியேற்றுவதற்கு எதிர்ப்பதற்கான தேசிய கூட்டணி எனும் ஜப்பானிய குடிமக்களால் உருவான குழு செப்டம்பர் முதல் நாள் டோக்கியோ வழக்கறிஞர் மன்றத்தில் புகார் கடிதம் சமார்பித்துள்ளது. ஃபுகுஷிமா அணு மின் நிலையமத்தின் கதிரியக்க நீரைக் கடலுக்குள் வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதம், ஜப்பானிய தலைமை அமைச்சர் ஃபுமியோ கிஷிடா மற்றும் டோக்கியோ மின்சார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டோமோகி கோபயாகவா மீது கடிதத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையாளப்பட்ட அணு கழிவு நீரில் நீக்க முடியாத கதிரியக்க பொருட்கள் இன்னும் நிலவியுள்ளன என்றும் இந்நீரைக் கடலில் வெளியேற்றி வருவது மிகவும் கடுமையானது என்றும் இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.