கதிரியக்க நீரை வெளியேற்றம்: தென்கொரிய மக்கள் எதிர்ப்பு
2023-09-02 19:14:21

செப்டம்பர் 2ஆம் நாள் தென்கொரியாவின் சுற்றுச்சூழல் சம்மேளனங்கள், மீன் பிடிப்பவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேலானோர் சியோல் நகரில் ஒன்றில் கூடி, கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றி வரும் ஜப்பானுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 24ஆம் நாள் ஜப்பான், கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றத் தொடங்கிய பிறகு, தென்கொரியாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் சம்மேளனங்கள்,  ஜப்பானுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.