சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்த போரின் வெற்றி
2023-09-03 17:34:16

சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்த போர் மற்றும் உலக மக்கள் பாசிசவாதத்தை எதிர்த்த போரின் வெற்றியின் 78வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் கலந்துரையாடல் கூட்டம் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் தலைவருமான லி ஷுலே இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்த போர், அண்மையுகத்தில் வெளிநாட்டு எதிரிகளுக்கு எதிரான மிக நீண்டகாலமான மிகப்பெரிய தேசிய விடுதலைப் போராட்டமாகும். முழுமையான வெற்றியைப் பெற்ற முதலாவது தேசிய விடுதலைப் போராட்டமும் இதுதான்.

இப்போரில் வெற்றி பெறுதல், பாசிசவாத எதிர்ப்பு போரின் முழுமையான வெற்றியை அறிவித்தது.  உலகில் ஒரு பெரிய சக்தியாக சீனா மாறியுள்ளதை இது மீண்டும் நிறுவியது. இதன் மூலம் உலகில் அமைதியை மக்களின் நேசிக்கும் மதிப்பைச் சீனா வென்றது.