புது தில்லி உச்சி மாநாட்டின் மீது சீனாவின் எதிர்ப்பார்ப்பு
2023-09-04 17:28:24

ஜி 20 நாடுகள் குழுவின் புது தில்லி உச்சி மாநாட்டின் மீது சீனாவின் எதிர்ப்பார்ப்பு குறித்து செப்டம்பர் 4ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் கூறுகையில்,

தற்போது உலக பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. உலக தொடரவல்ல வளர்ச்சி மேலதிகமான இன்னல்களைச் சந்தித்துள்ளது. சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பின் முக்கிய மேடை, ஜி 20 நாடுகள் குழுவின் புது தில்லி உச்சி மாநாடு, இது குறித்து கருத்து ஒற்றுமையை எட்டி, நம்பிக்கையை வெளியிட வேண்டும் என்று சீனா விரும்புவதாக என்றார்.