சிங்கப்பூர் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னம்
2023-09-04 14:10:55

சிங்கப்பூர் அரசுத் தலைவர் தேர்தலில் சிதர்மன் சண்முகரத்னம் 70.40 விழுக்காட்டு ஆதரவு வாக்குகளுடன் வென்று அந்நாட்டின் 9ஆவது அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று 2ஆம் நாள் வெளியான  முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் துணை தலைமையமைச்சர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் மற்றும் மனிதவள அமைச்சராகப் பதவியேற்றார். மேலும்,  2019ஆம் ஆண்டு முதல் மூத்த அமைச்சராகவும் தர்மன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.