சீன வேளாண்மைக்கான கடன் ஆதரவு அதிகரிப்பு
2023-09-04 14:57:31

இவ்வாண்டிலிருந்து சீனாவின் வேளாண்மைக்கான கடன் இருப்பு விரைவான வளர்ச்சியை நிலைநிறுத்தி வருகின்றது. தேசிய நிதி கண்காணிப்பு நிர்வாகப் பணியகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, ஜுலை வரை, நாட்டில் வேளாண்மைக்கான கடன் இருப்புத் தொகை 54இலட்சத்து 65ஆயிரம் கோடி யுவான் ஆகும். இது, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 15.7சதவீதமாக அதிகமாகும்.  

இவ்வாண்டில், வேளாண் துறை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகள் ஆகியவற்றுக்கு வங்கிகள் நிதி சேவை வழங்குவதில் தேசிய கண்காணிப்பு நிர்வாகப் பணியகம் நான்கு புறங்களிலிருந்து வழிகாட்டல்கள் அளித்துள்ளது. முழு தானிய தொழில் சங்கிலி வளர்ச்சிக்கு கடன் கொடுப்பதற்கு உத்தரவாதம் அளித்தல், பயிர் விதைகள் மற்றும் விளைநிலத்துக்கான கடன் கொடுக்கும் அளவை அதிகரித்தல், நவீன வேளாண்மைக்கான நிதி உதவியை அதிகரித்தல், புதிய ரக வேளாண்மை வளர்ச்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபருக்கு வழங்கும் நிதி சேவை நிலையை உயர்த்துவது ஆகிய நான்கு அம்சங்சள் இடம்பெறுகின்றன.