சீனச் சேவை வர்த்தகத்தின் சர்வதேசப் போட்டி அதிகரிப்பு
2023-09-04 14:15:21

2023ஆம் ஆண்டில் சீனச் சர்வதேச்ச் சேவை வர்த்தகக் கண்காட்சி பெய்ஜிங்கில் நடைபெற்று வருகின்றது. மேலும், பல மன்றக்கூட்டங்களும் கருப்பொருளிலான கூட்டங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நடத்தப்பட்டுள்ளன. உலகச் சேவை வர்த்தக வளர்ச்சிப் போக்கு, டிஜிட்டல் வர்த்தக வளர்ச்சி ஆகியவை இக்கூட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டன.

சேவை வர்த்தக வளர்ச்சி உச்சிமாநாடு மனறத்தில் 2022ஆம் ஆண்டின் சீனச் சேவை வர்த்தக வளர்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் படி, சீனாவின் சேவை ஏற்றுமதி இறக்குமதி தொகை வரலாற்றில் மிக அதிகமாகும். தொடர்ந்து 9 ஆண்டுகளாக, உலகின் 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. வர்த்தக சேவைகளின் சர்வதேசப் போட்டி ஆற்றல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. டிஜிட்டல் சேவை ஏற்றுமதி, சேவை ஏற்றுமதியில் ஏறக்குறைய 50% வகிக்கின்றது.