வங்காள தேசத்தின் முதலாவது எலிவேட்டட் அதிகவேக விரைவுசாலை போக்குவரத்துக்குத் திறப்பு
2023-09-04 15:21:05

வங்காள தேசத்தின் டாகா விமான நிலையத்திற்கான எலிவேட்டட் அதிகவேக விரைவுசாலைத் திட்டப்பணியின் முதலாவது பகுதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டதன் துவக்க விழா செப்டம்பர் 2ஆம் நாள் நடைபெற்றது. சீனாவின் ஷாங்தூங் ஹைய்-ஷ்பிட் நிறுவனத்தின் தலைமையில் முதலீடு மற்றும் கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்ட இச்சாலை, வங்காள தேசத்தின் முதலாவது எலிவேட்டட் அதிகவேக விரைவுசாலையாக திகழ்கின்றது.

வங்காள தேசத்தின் தலைமை அமைச்சர் ஷேக் ஹசினா, வங்காள தேசத்திலுள்ள சீன தூதரகத்தின் துணை நிலை தூதர் யேன்ஹூவாலோங், வங்காள தேசப் போக்குவரத்து அமைச்சர் குவாடார் முதலியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இது வங்காளத் தேசத்தின் போக்குவரத்து வளர்ச்சியின் வரலாற்றில் ஒரு புதிய மை கல் சாதனையாகும். அந்நாட்டின் முதலாவது எலிவேட்டட் அதிகவேக விரைவுசாலையான அது டாகா நகரின் போக்குவரத்து நிலைமையைப் பெரிதும் மேம்படுத்தும் என்றும் ஹசினா உரைநிகழ்த்திய போது தெரிவித்தார்.

டாகா விமான நிலையத்திற்கான எலிவேட்டட் அதிகவேக விரைவுசாலைத் திட்டப்பணியில் 126.3கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முக்கிய பகுதி 19.73கிலோ மீட்டர் நீளமாகும். தற்போது, 11.297கிலோமீட்டர் நீளமான பகுதி இயங்கத் துவங்கியது.