தாய்லாந்தின் விசா இல்லாமல் செல்லும் கொள்கை
2023-09-04 11:16:06

சீன மற்றும் இந்திய பயணிகளுக்கு விசா இல்லாமல் செல்லும் சேவையை வழங்குவதை தாய்லாந்து புதிய தலைமையமைச்சர் ஸ்ரேத்தா தவிசின் உத்தேசித்து கொண்டிருக்கிறார். தொடர்புடைய கொள்கை அக்டோபர் அல்லது நவம்பர் திங்களுக்கு முன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசாவீற்கு விண்ணப்பிக்கும் போது நீண்காலமாக காத்திருப்பது, தாய்லாந்தில் சுற்றுலா பயணத்துக்கான தடைகளில் ஒன்றாகும். விசா இல்லாமல் செல்லும் கொள்கை, அந்நாட்டின் சுற்றுலா துறையின் மீட்சிக்குத் துணைப் புரியும் என்று சுற்றுலா துறையினர் மற்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.