இஸ்ரேலில் நிகழ்ந்த மோதலில் சுமார் 160 பேர் காயம்
2023-09-04 14:12:50

இஸ்ரேல் முதலுதவி அமைப்பு மற்றும் காவற்துறை வட்டாரம் வெளியிட்ட செய்தியின் படி, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் எரித்திரிய அகதிகளுக்கும் காவற்துறைக்குமிடையிலான பெரிய அளவிலான மோதல் நிகழ்ந்தது. இதில் சுமார் 160 பேர் காயமடைந்தனர். அவர்களில் 15 பேர் பலத்த காயமடைந்தனர்.

இஸ்ரேல் செய்தி ஊடகம் வெளியிட்ட செய்தியின் படி, அன்று முன்னதாக, எரித்திரிய அகதிகள் இஸ்ரேலில் உள்ள எரித்திரிய தூதரகம் அருகே ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதற்கிடையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகளையும் வாகனங்களையும் அடித்து நொறுக்குவது உள்ளிட்ட வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.