ஜப்பானின் கதிரியக்க வெளியவேற்றுதல் குறித்து சர்வதேச சமூகத்தின் கவனம்
2023-09-05 17:26:26

ஜப்பான் உலக வர்த்தக அமைப்பிடம் ஆவணம் ஒன்று ஒப்படைத்துள்ளது. ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு கத்தியக்க நீரை ஜப்பான் வெளியேற்றிய பிறகு, ஜப்பானின் நீர் வாழ் உயிரினங்களுக்கான இறக்குமதியை சீனா தடை செய்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் 4ஆம் நாள் தெரிவித்தது.

இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் செப்டம்பர் 5ஆம் நாள் கூறுகையில்,

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு கத்தியக்க நீரை ஜப்பான் வெளியேற்றுவது குறித்து சீனா பல முறை கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளது. ஜப்பானின் இச்செயல், மக்கள் அணு ஆற்றலை அமைதியாகப் பயன்படுத்துவது முதல் இது வரை முன்கண்டிராதது. இதற்கான கையாளும் வரையறை கிடைக்கவில்லை. ஜப்பானின் இச்செயல், கடல் சுற்றுச் சூழல் மற்றும் பொது பாதுகாப்புக்கு இடர்பாடு கொண்டு வருவதில் சர்வதேச சமூகம் பொதுவாகக் கவனம் செலுத்தி, இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சீனாவின் தடை நடவடிக்கைகள் இயல்பானதும். தேவையானதும் கூட என்று தெரிவித்தார்.