ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் இஸ்ரேலின் திட்டம்:இஸ்ரேல்
2023-09-05 11:06:24

இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகு, சைப்ரஸ் அரசுத் தலைவர் கிறிஸ்டோ ஜூலிட்ஸ், கிரேக்க தலைமையமைச்சர் மிசோடாகிஸ் ஆகியோர் சைப்ரஸின் தலைநகரான நிக்கோசியாவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில், ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் இஸ்ரேலின் திட்டம் குறித்து மூன்று நாடுகளின் தலைவர்கள் விவாதித்தனர். அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் எரிவாயுவை அனுப்புவதற்கான இறுதி நெறியை தீர்மானிப்பதாக இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

மூன்று நாடுகளின் மின் கட்டம் இணைப்பு, காலநிலை வெப்பமயமாதல் மற்றும் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு முதலியவை குறித்து அவர்கள் விவாதித்தனர். தவிரவும், சௌதி அரேபியாவுக்கு இஸ்ரேலுக்குமிடையே தூதாண்மை உறவு இயல்பாக இருக்கும் சாத்தியம் இருக்கின்றது என்று நெதன்யாகு கூறினார்.