வெளிநாடுகளில் வேலை செய்யும் 2லட்சம் இலங்கை மக்கள்
2023-09-05 10:33:14

இவ்வாண்டின் செப்டம்பர் வரை, சுமார் 2லட்சமான இலங்கை மக்கள் வெளிநாட்டில் வேலை செய்ய அந்நாட்டின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து இலங்கையை விட்டுச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்பவரின் மொத்த எண்ணிக்கை 3லட்சத்து 11ஆயிரத்தை எட்டியது. இவ்வாண்டிலும் இதைப் போன்ற எண்ணிக்கை எட்டக்கூடும் என்று இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அண்மையில் கூறினார்.