பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்ட அமெரிக்க திரைப்பட மற்றும் இசைத் துறை
2023-09-05 10:09:44

அமெரிக்காவின் தொழிலாளர் துறை அமைச்சகம வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் திரைப்படம் மற்றும் இசைத் துறையைச் சேர்ந்த 17ஆயிரம் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. அண்மைக்காலத்தில் ஹாலிவுட்டில் நிகழ்ந்த வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பை இது பிரதிபலிக்கின்றது.

அமெரிக்காவின் எழுத்தாளர் சங்கமும், அமெரிக்க நடிகர் சங்கமும், தொலைக்காட்சி மற்றும் ஒலிபரப்புப் பணியாளர்கள் கூட்டமைப்பும் முறையே இவ்வாண்டின் மே மற்றும் ஜூலை மாதத்தில் முதல் வேலை நிறுத்தத்தை நடத்தியுள்ளன. அதன் பாதிப்பால் தான், ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் வேலை வாய்ப்புகள் பொதுவாக அதிகரித்தாலும், திரைப்படம் மற்றும் இசைத் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் குறைந்து பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.