சீனாவின் குவாங்யுவான் நகரில் மகள் விழாக் கொண்டாட்டம்
2023-09-05 12:26:45

சீனாவின் குவாங்யுவான் நகரில் 2023ஆம் ஆண்டுக்கான மகள் விழாக் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

துவக்க விழாவில், வண்ணமயமான படகுகளின் அணிவகுப்பு, படகுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும்  அரங்கேற்றப்பட்டுள்ளன. உள்ளூர் தனிச்சிறப்புமிக்க வரலாறு மற்றும் கலாச்சாரப் பாரம்பரியங்களை இந்த நிகழ்ச்சிகளில் இருந்து நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது

பண்டைய சீன வரலாற்றில் வூசேதியன் என்பவரை நினைவுக் கூரும் வகையில், குவாங்யுவான் நகரில் மகள் விழா அனுசரிக்கப்படுகிறது. தற்போது குவாங்யுவானில் இந்த விழா ஆண்டுதோறும்  கொண்டாடப்பட்டு வருகிறது. இது, புகழ்பெற்ற பண்பாடு ரீதியிலான அடையாளச் சின்னமாக மாறியுள்ளது.