சீன மக்கள் குடியரசு வெளிநாட்டுத் தேசிய விலக்குரிமை சட்டம் இயங்குதல்
2023-09-05 17:32:56

சீன மக்கள் குடியரசு வெளிநாட்டுத் தேசிய விலக்குரிமை சட்டத்தை சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி அண்மையில் பரிசீலனை செய்து ஏற்றுக்கொண்டது.  இச்சட்டத்தை அங்கீகரித்து, சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் இயல்பான நடவடிக்கையாகும். சர்வதேச நடைமுறையின்படி, வெளிநாட்டு தேசிய விலக்குரிமை குறித்து இக்கமிட்டி விதித்துள்ளது. சீனாவின் வெளிநாட்டுத் தேசிய விலக்குரிமை அமைப்புமுறையை மேம்படுத்தி, வெளிநாட்டுத் தேசிய மற்றும் தன் சொத்துகளுடனான சிவில் வழக்குகளை சீன நீதி மன்றம் பரிசீலனை செய்வதற்கு இது துணை புரியும். தொடர்புடையவரின் சட்டப்பூர்வமான உரிமையையும் நலன்களஐயும் உத்தரவாதம் செய்து, நாட்டு இறையாண்மை சமத்துவத்தைப் பேணிக்காத்து, அந்நிய நட்புறவுப் பரிமாற்றத்தை விரைவுபடுத்தி, மேலும் உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பை மேற்கொள்வதற்கு இது நன்மை புரியும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.