புதிய தேசிய பாதுகாப்பு அமைச்சரை மாற்ற உக்ரைன் அரசுத் தலைவர் உத்தரவு
2023-09-05 10:12:29

மாஸ்கோ நேரப்படி 3ஆம் நாள் அதிகாலையில், ரஷியாவின் வான் பாதுகாப்புப் படை குர்ஸ்க் மாநிலம் மற்றும் கருங்கடலின் வான்பரப்பில் பறந்து சென்ற உக்ரைனின் 2 ஆள்ளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷியத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் 4ஆம் நாள் அறிவித்தது.

மேலும், ரெஸ்னிகோவ் உக்ரைன் தேசிய பாதுகாப்பு அமைச்சரின் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், உக்ரைனின் அரசு சொத்து நிதியத்தின் தலைவரான ரஸ்டம் உமெரோவ் என்பவர் புதிய பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்பதாகவும் அந்நாட்டின் அரசுத் தலைவர் ஜெலென்ஸ்கி 3ஆம் நாள் தெரிவித்தார்.