ஜி 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சீனா
2023-09-05 16:57:43

இந்தியாவில் நடைபெறும் ஜி 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் செப்டம்பர் 5ஆம் நாள் கூறுகையில்,

ஜி 20 நாடுகள் குழு, முக்கிய சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மேடையாகும். சீனா எப்போதுமே இதில் கவனம் செலுத்தி வருகின்றது. இந்தியாவில் நடைபெறவுள்ள ஜ 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, இவ்வுச்சி மாநாடு வெற்றி பெறுவதற்கு பங்காற்ற சீனாவிரும்புகின்றது. சீன-இந்திய உறவின் வளர்ச்சியும் மேம்பாடும் இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரியும் என்றார்.