ஜிம்பாப்வே அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முனங்காக்வா
2023-09-05 10:24:35

ஜிம்பாப்வே அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முனங்காக்வா 4ஆம் நாள் தலைநகர் ஹராரேவில் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்து, தனது இரண்டாவது ஐந்தாண்டு பதவிக்காலத்தைத் தொடங்கினார்.

புதிய பதவிக்காலத்தில் கிராமப்புற வளர்ச்சியை விரைவுபடுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, தேசிய தானியங்களின் பாதுகாப்பை பலப்படுத்தி, அடிப்படை வசதிகள் மற்றும் பொது பயன்பாடுகள் ஆகிய துறைகளின் நவீனமயமாக்கலைத் தொடர்ந்து முன்னேற்றி, தேசிய உற்பத்தி திறன் மற்றும் எரிசக்தி விநியோகத்தை மேம்படுத்துவார் என்று அவர் தனது பதவி ஏற்பு உரையில் கூறினார்.