சீன மற்றும் இத்தாலி வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை
2023-09-05 11:01:18

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 4ஆம் நாள் பெய்ஜிங்கில் இத்தாலி துணை தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தயானியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புவிசார் அரசியல் உள்ளிட்ட அறைகூவல்களை எதிர்கொள்ளும் போது பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நம்பிக்கை, திறந்த ஒத்துழைப்பு மற்றும் சம பேச்சுவார்த்தை ஆகியவற்றுடன் பழகுவதற்கான சரியான வழியை இரு நாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்றும், இரு நாட்டு உறவின் சீரான மற்றும் நிதானமான வளர்ச்சியை முன்னேற்றச் சீனா விரும்புவதாகவும் வாங் யீ தெரிவித்தார்.

நீண்டகால மற்றும் நிலைப்புதன்மை வாய்ந்த இரு நாட்டு உறவுக்கு இத்தாலி தரப்பு முக்கியத்துவம் அளித்து, ஒரே சீனா என்ற கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றும் என்றும், தற்போதைய சர்வதேச நிலைமை நிலையற்றதாக இருந்தாலும், இத்தாலி-சீனா உறவு பாதிக்கப்படாது என்று தயானி கூறினார்.