26ஆவது ஆசியாங்-சீன ஜப்பான் தென்கொரிய தலைவர்கள் கூட்டத்தில் பங்கெடுத்த சீன தலைமை அமைச்சர்
2023-09-06 19:39:48

சீன தலைமை அமைச்சர் லீ ச்சியாங், 6ஆம் நாள் ஜகார்த்தாவில், 26ஆவது ஆசியான்-சீன ஜப்பான் தென்கொரிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பத்து ப்ளாஸ் மூன்று என்று ஒத்துழைப்பு அமைப்பு முறை, பல சோதனைகளை தாக்குப்பிடித்துள்ளது. பிரதேச வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னேற்றுவதற்குப் பங்காற்றியுள்ளது என்று லீ ச்சியாங் கூறினார். இவ்வமைப்பு முறை, வளர்ச்சியை முதன்மை இடத்தில் வைத்து, தலையீடுகளை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜப்பானின் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீர் கடலில் வெளியேறுவது குறித்து அவர் கூறுகையில்,

ஜப்பான் சர்வதேச கட்டாயத்தை நடைமுறைப்படுத்தி, பொறுப்பு ஏற்கும் வழிமுறையில், கதிரியக்க நீரைச் சமாளிக்க வேண்டும் என்றார்.