78ஆவது ஐ.நா. பொது பேரவை துவக்கம்
2023-09-06 10:53:54

78ஆவது ஐ.நா. பொது பேரவை 5ஆம் நாள், நியுயார்க் மாநகரிலுள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் தொடங்கியது. மனிதக் குலத்தின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை மேலும் நன்றாகப் பாதுகாக்கும் வகையில், உண்மையான பல தரப்புவாதத்தைப் பயன்படுத்தி, உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அறைகூவல்களை உறுப்பு நாடுகள் தீர்க்க வேண்டும் என்று நடப்பு பேரவையின் தலைவர் டானிஸ் ஃபுரன்சிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

அதே நாள் முன்னதாக, 77ஆவது ஐ.நா. பொது பேரவை நிறைவடைந்தது. மேலும், 77ஆவது ஐ.நா. பொது பேரவையின் தலைவர் கரோசி உரைநிகழ்த்திய பின், டானிஸ் ஃபுரன்சிஸ், 78ஆவது ஐ.நா. பொது பேரவையின் தலைவராக பதவியேற்றார்.

ஐ.நா. பொது பேரவையின் வழமையான கூட்டத்தொடர், ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறுகின்றது. இது, பொதுவான விவாதம், பல்வேறு பிரச்சினைகளின் மீதான பரிசீலனை ஆகிய 2 கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.