6ஆவது பட்டுப்பாதை சர்வதேசப் பண்பாட்டுக் கண்காட்சி
2023-09-06 16:55:19

6ஆவது பட்டுப்பாதை சர்வதேசப் பண்பாட்டுக் கண்காட்சி செப்டம்பர் 6ஆம் நாள் கன்சு மாநிலத்தின் துன்ஹுவாங் நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் அமைச்சருமான லி ஷுலே இக்கண்காட்சியில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.

துன்ஹுவாங் பண்டைய பட்டுப்பாதையில் முக்கியமான முனையாகும். இவ்வாண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவின் 10ஆவது ஆண்டு நிறைவாகும். புதிய தொடக்க கட்டத்தில், உலகளாவிய நாகரிக முன்மொழிவை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த வேண்டும். சர்வதேச மனித பன்பாட்டுப் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் விரிவாக மேற்கொள்ள வேண்டும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானத்துக்கு ஆழ்ந்த நாகரிக சக்தியை செலுத்த வேண்டும் என்று சீன மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் தெரிவித்தனர்.

"உலகுடன் தொடர்பு: பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர நாகரிக அனுபவத்தைப் பயன்படுத்துவது" என்பது இக்கண்காட்சியின் தலைப்பாகும். 50க்கும் மேற்பட்ட நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டனர்.