பிரேசில் வெப்ப மண்டலச் சூறாவளியில் 22 பேர் பலி
2023-09-06 14:41:19

தெற்கு பிரேசிலிலுள்ள ரியோ கிராண்ட் டோ சல் மாநிலம் 4ஆம் நாள் முதல், வெப்ப மண்டலச் சூறாவளியால் பாதிக்கப்பட்டு, 21 பேர் உயிரிழந்தனர். மேலும், சான்டா கத்தலினா மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்பதை இம்மாநிலத்தின் தீயாணைப்பு வாரியம் உறுதிப்படுத்தியது.

இது வரை, ரியோ கிராண்ட் டோ சல் மாநிலத்தில் 25 ஆயிரம் பேர் வெப்ப மண்டல சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 300க்கு மேலான வீடுகள் சேதமடைந்தன. நிவாரணப் பணிக்காக  ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களை இம்மாநில அரசு அனுப்பியுள்ளது. பிரேசில் இராணுவப் படை மற்றும் கூட்டாட்சி நெடுஞ்சாலை காவற்துறையியும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புதவி ஆற்றலை அனுப்பியுள்ளன.

தற்போது, உள்ளூர் பிரதேசத்தில் ஆற்றின் நீர் மட்டம் உயர் நிலையில் உள்ளது. 8ஆம் நாள் வரை தொடர்ந்து பெய்யும் கடும் மழையால் மேலதிகமான பிரதேசங்கள் பாதிக்கப்படக் கூடும் என்று இம்மாநிலத்தின் சிவில் பாதுகாப்பு துறை தெரிவித்தது.