சீன-அமெரிக்க ஒத்துழைப்புக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய அமெரிக்கா
2023-09-06 19:04:24

கால நிலை பிரச்சினை குறித்து சீனாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும். இது இரு தரப்பு பிரச்சினையல்ல. உலகம் சந்திக்கின்ற பிரச்சினையாகும் என்று கால நிலை பிரச்சினை பற்றிய அமெரிக்க அரசுத் தலைவரின் சிறப்பு நிரதிநிதி க்ரி அண்மையில் தெரிவித்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 6ஆம் நாள் கூறுகையில்,

பாரிஸ் உடன்படிக்கையின் செயல்பாட்டை சீனாவும் அமெரிக்காவும் கூட்டாக முன்னேற்றின. அமெரிக்கா, சீனாவுடன் இணைந்து, ஒரே திசை நோக்கி, இரு நாட்டு கால நிலை ஒத்துழைப்புக்கு சரியான நிபந்தனைகளையும் சூழலையும் உருவாக்க வேண்டும் என்று சீனா விரும்புகின்றது என்றார்.