சீன-இந்தோனேசிய தொழில் வணிகத் துறை விருந்தில் லீச்சியாங் பங்கேற்பு
2023-09-06 10:29:33

சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் செப்டம்பர் 5ஆம் நாளிரவு ஜகார்த்தாவில் சீன-இந்தோனேசிய தொழில் மற்றும் வணிகத் துறையின் விருந்தில் பங்கேற்று உரைநிகழ்த்தினார். இரு நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர்.

லீச்சியாங் கூறுகையில், சீனாவும் இந்தோனேசியாவும் பெரிய வளரும் நாடுகள் ஆகும். அமைதியான வளர்ச்சி மற்றும் கூட்டு வெற்றி பெறக் கூடிய ஒதுழைப்பானது இரு நாடுகளின் வளர்ச்சி மற்றும் மக்களின் இன்பத்துக்கு ஒரே ஒரு பாதையாகும். அமைப்பு முறை ரீதியிலான திறப்பை நிதானமாக விரிவாக்குவது, நவீன சேவை உள்ளிட்ட துறைகளில் சந்தை நுழைவுக்கான வரையறையை மேலும் தளர்த்துவது, அறிவுசார் சொத்துரிமையின் பாதுகாப்பை அதிகரிப்பது ஆகியவற்றில் ஈடுபடும் சீனா, சந்தைமயமாக்கல், சட்டமயமாக்கல் மற்றும் சர்வதேச மயமாக்கலான முன்னணி வணிகச் சூழலை உருவாக்கவும் பாடுபடும். சந்தையின் திறப்பை இந்தோனேசியா தொடர்ந்து நிலைப்படுத்திச் சீனத் தொழில் நிறுவனங்களுக்கு சம்மான மற்றும் நியாயமான வணிகச் சூழலை உருவாக்க வேண்டும் என சீனா விரும்புவதாக லீச்சியாங் சுட்டிக்காட்டினார்.