26வது சீனா-ஆசியான்(10+1) தலைவர்கள் கூட்டத்தில் லீச்சியாங் பங்கெடுப்பு
2023-09-06 19:05:17

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் செப்டம்பர் 6ஆம் நாள் ஜகார்த்தா நகரில் 26வது சீனா-ஆசியான்(10+1) தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆசியான் நாடுகளுடன் இணைந்து ஒற்றுமையுடனான சுய முன்னேற்றத்தைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியின் எழுச்சியை நிலைநிறுத்தி, கூட்டு தாயகத்தைக் கூட்டாக கட்டியமைக்க சீனா விரும்புவதாக லீ ச்சியாங் தெரிவித்தார். சீனா மற்றும் ஆசியானுக்கான மேலும் நெருங்கிய பொது எதிர்காலத்தைக் கட்டியமைப்பது குறித்து அவர் 4 ஆலோசனைகளை முன்வைத்தார். முதலாவது, பொருளாதார அதிகரிப்பு மையத்தை உருவாக்குவது, இரண்டாவது, புதிதாக வளரும் வருகின்ற தொழிற்துறைகளின் ஒத்துழைப்பை முன்னேற்றுவது, மூன்றாவது, பிரதேச அமைதியைப் பேணிகாப்பது, நான்காவது, மனிதப் பண்பாட்டுப் பரிமாற்றத்தை விரிவாக்குவது என்று அவர் தெரிவித்தார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவு, ஆசியான்-இந்தோ-பசிபிக் ஒன்றுக்கு ஒன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்பு ஆகியவை குறித்த கூட்டறிக்கை இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது.  2024ஆம் ஆண்டில் சீனா-ஆசியான் மனிதப் பண்பாட்டுப் பரிமாற்ற ஆண்டு என்று அறிவிக்கப்பட்டது.