அமெரிக்க யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அனைத்து விமானச் சேவை இடைநிறுத்தம்
2023-09-06 14:12:43

அமெரிக்க யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்நாட்டின் நாடளவில் விமான சேவைக்கான இடைநிறுத்த உத்தரவை 5ஆம் நாள் மாலை வெளியிட்டது. சுமார் ஒரு மணிநேரத்துக்குப் பின், இந்த உத்தரவு நீக்கப்பட்டது.  மென்பொருள் மேம்படுத்தலில் ஏற்பட்ட கோளாறு, அதற்கான காரணம் என்றும் இணையத் தாக்குதல் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.. மென்பொருள் மேம்படுத்தலின் போது, அமைப்பு முறை பாதிக்கப்பட்டு விமானப் பணியாளர்கள் விமான உதவியாளருடன் இயல்பான முறையில் தொடர்பு மேற்கொள்ள முடியாது என்று யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

அன்று யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 300க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாகின.