சீன மற்றும் கிரெநாடா வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு
2023-09-06 17:35:06

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ செப்டம்பர் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் கிரெநாடா வெளியுறவு அமைச்சர் ஆண்டரைச் சந்தித்துப் பேசினார்.

கரீபியனில் ஒரு முக்கியமான நாடாக உள்ள கிரெநாடா சீனாவின் நட்பார்ந்த ஒத்துழைப்புக் கூட்டாளி நாடாகும். இரு நாடுகளுக்குமிடையிலான தூதாண்மை உறவு மீண்டும் மீட்டெடுக்கப்பட்ட பிறகு இரு நாட்டு உறவு நாளுக்குநாள் முதிர்ச்சியடைந்து வருகிறது. ஒரே சீனா என்ற கோட்பாட்டைக் கிரிநாடா பின்பற்றுவதைச் சீனா வெகுவாக பாராட்டுகின்றது. கிரிநாடாவுடன் இணைந்து ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை உயர் தரமாகவும் கூட்டாகவும் கட்டியமைக்க வேண்டும் என்று சீனா விரும்புகின்றது. பரந்த வளரும் நாடுகளுடன் இணைந்து வளரும் நாடுகள் குறிப்பாக, சிறிய மற்றும் நடுத்தர நாடுகளின் நியாயமான உரிமை நலன்களையும் சர்வதேச நேர்மை மற்றும் நீதியையும் பேணிக்காக்க வேண்டும் என்று வாங் யீ தெரிவித்தார்.