சீனப் பொருளாதார வீழ்ச்சி என்ற கூற்றுக்குப் பதிலான உண்மைகள்
2023-09-07 14:55:11

2023ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி 6ஆம் நாள் முடிவடைந்தது. 5 நாட்கள் நடைபெற்ற இப்பொருட்காட்சியில், 83 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கண்காட்சிகளை அமைத்து கூட்டங்களை நடத்தின. சுமார் 2இலட்சத்து 80ஆயிரம் பேர் இப்பொருட்காட்சியை பார்வையிட்டனர். அதோடு, 1100க்கும் அதிகமான சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. சீனப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவது பற்றிய சில மேலை நாட்டு அரசியல்வாதிகளின் கூற்றுக்குப் பதிலடி அளிக்கும் விதமாக இவை இருந்தன.

நடப்புபொருட்காட்சியின் கெளரவ விருந்தினர் நாடான பிரிட்டனின் பிரதிநிதிக் குழு, இப்பொருட்காட்சியில் 4 முறை பங்கெடுத்த அதன் மிகப் பெரிய குழுவாகும். இக்குழுவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் எண்ணிக்கை 60ஐ தாண்டியது. குவால்காம், இன்டெல் முதலிய அமெரிக்க தொழில் நிறுவனங்கள் பல தொழில் நுட்பங்கள் மற்றும் தீர்வு வழிமுறைகளுடன் இப்பொருட்காட்சியில் சுறுசுறுப்பாக செயல்பட்டன. அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் காட்சிபடுத்தப்பட்டன.

தற்போது, சீனா வணிகப் பொருட்களின் நுகர்வை முக்கியமாக கொண்டிருப்பதிலிருந்து, வணிகப் பொருட்கள் மற்றும் சேவை வர்த்தகம் ஆகிய இரண்டு பகுதிகளை முக்கியமாக கொண்டிருப்பதாக மாறி வருகின்றது. இதனால், சேவை நுகர்வு தொடர்பான தரவுகளும் உயர்ந்து வருகின்றது.

வெளிநாட்டுத் திறப்பு அளவை தொடர்ந்து விரிவாக்குவது பற்றிய கொள்கையின் நிலைத்தன்மை, சீனாவிலுள்ள அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கின்றது. தற்போது, உற்பத்தி தொழிலில் அந்நிய முதலீட்டுக்கு சீனா அடிப்படையில் அனுமதித்துள்ளது. சேவைத் துறையைத் திறக்கும் பணி ஒழுங்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மற்ற நாட்டின் பொருளாதாரம் பற்றிய பாதகமான கூற்றைப் பரப்பும் செயல், சொந்த நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. கூட்டாக வளர்ச்சி வாய்ப்பை நாடுவதே, சரியான வழிமுறையாகும்.