ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய 3ஆவது சர்வதேச ஒத்துழைப்பு மன்றக்கூட்டம்
2023-09-07 18:36:55

இவ்வாண்டு அக்டோபர் திங்கள், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய 3ஆவது சர்வதேச ஒத்துழைப்பு மன்றக்கூட்டம் பெய்ஜிங்கில் நடத்தப்படவுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 7ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

இன்று, பட்டுபாதை பொருளாதார மண்டலம் முன்மொழியப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவாகும். அக்டோபர் திங்கள், பெய்ஜிங்கில் நடத்தப்படும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய 3ஆவது சர்வதேச ஒத்துழைப்பு மன்றக்கூட்டம் இம்முன்மொழிவை உயர் தரமாக கட்டியமைப்பது குறித்து பல்வேறு தரப்புகள் விவாதிக்கும் முக்கிய மேடையாக திகழ்கின்றது. இப்போது வரை 90க்கும் மேலான நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ள உறுதி செய்துள்ளனர் என்றார்.