சீன-ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் சந்திப்பு
2023-09-07 17:02:55

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், கிழக்காசிய ஒத்துழைப்பு பற்றிய தலைவர்களின் கூட்டங்களில் பங்கெடுத்த போது ஆஸ்திரேலியா தலைமையமைச்சர் அந்தோணி அல்பானீஸுடன் சந்திப்பு நடத்தினார்.

லீ ச்சியாங் கூறுகையில், சீன-ஆஸ்திரேலிய சீரான உறவு, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்கள் மற்றும் கூட்டு விருப்பங்களுக்குப் பொருந்தியது. இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு உறுதியான ஆதரவளிக்கும் விதம், ஆஸ்திரேலியாவுடன் பல்வேறு துறைகளில் பரிமாற்றங்களை மீண்டும் துவக்க சீனா விரும்புவதாக தெரிவித்தார். மேலும், ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவது ஆகியவற்றைக் கொண்ட மனப்பாங்குடன், இரு தரப்பும் கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் கையாண்டு, இரு நாட்டுறவின் மேம்பாட்டை மேலும் முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.