உக்ரைனுக்கு 100 கோடி அமெரிக்க டாலர் புதிய உதவி: அமெரிக்கா
2023-09-07 15:39:55

உள்ளூர் நேரப்படி 6ஆம் நாள் உக்ரைனின் தலைநகரான கியேவிவ்வில் பயணம் மேற்கொண்ட போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், உக்ரைனுக்கு 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள புதிய உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளது என்றும் இதில் இராணுவ நோக்கங்களுக்காக 66.5 கோடி அமெரிக்க டாலர் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.

அமெரிக்கச் செய்தி ஊடகம் வெளியிட்ட செய்தியின் படி, ரஷிய-உக்ரைன் மோதலுக்குப் பிறகு, உக்ரேனுக்கு 4300 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான இராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

அதே நாள் ரஷிய அரசுத் தலைவரின் செய்திச் செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பிளிங்கனின் சியேவ் பயணம் குறித்து கூறுகையில், உக்ரேனை போர் நிலையில் வைத்திருக்க, அமெரிக்கா அனைத்தையும் செய்யும் என்பதை பிளிங்கனின் இப்பயணம் மீண்டும் நிரூபித்துள்ளது என்றார்.