இ-ஸ்போர்ட்ஸ் கமிட்டியை நிறுவ சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
2023-09-07 15:05:03

வரலாற்றில் முதலாவது இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுப் போட்டிக் கமிட்டியை நிறுவவுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 6ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

இது பற்றி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் பாஹ் கூறுகையில், பாரம்பரிய ஒலிம்பிக் விளையாட்டை வலுப்படுத்துவதற்கான உள்ளார்ந்த ஆற்றலை மெய்நிகர் விளையாட்டு கொண்டுள்ளது. இது ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்கும் புதிய வாய்ப்புகளை விளையாட்டு வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் கொண்டு வரும். இது பன்னாட்டு இளைஞர்கள் விளையாட்டு செயல்பாடுகளில் பங்கேற்க ஊக்கமளித்து, நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வழிமுறைக்கு வழிகாட்டும் என்று அவர் மேலும் கூறினார்.