சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை நிதானமாக உள்ளது
2023-09-07 19:35:28

சீனத் தேசிய அன்னிய செலாவணி நிர்வாகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு அகஸ்ட் இறுதிவரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை 3 லட்சத்து 16 ஆயிரத்து 10 கோடி அமெரிக்க டாலராகும். ஜூலை இறுதியில் இருந்ததை விட இது 4420 கோடி அமெரிக்க டாலர், அதாவது 1.38 விழுக்காடு குறைந்துள்ளது.

ஆகஸ்ட் திங்களில், முக்கிய பொருளாதார நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதாரத் தரவுகள், நாணயக் கொள்கைக்கான மதிப்பீடு உள்ளிட்ட காரணங்களால், அமெரிக்க டாலர் குறியீடு உயர்ந்துள்ளது. உலக நாணயச் சொத்துகளின் விலை பொதுவாக குறைந்துள்ளது. சீரான மீட்சி அடைந்து வருகின்ற சீனப் பொருளாதாரம், பெரும் உள்ளார்ந்த ஆற்றல் மற்றும் ஈர்ப்பு ஆற்றலைக் கொள்கிறது. அன்னிய செலாவணி கையிருப்பு அளவின் நிலைப்புத் தன்மைக்கு இது துணைப் புரியும்.